ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்.,, 4 விரைவு ரயில்கள் ரத்து!!

0
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்.,, 4 விரைவு ரயில்கள் ரத்து!!

தமிழகத்தில் இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே பணி நடக்கவுள்ளதால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், மீண்டும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் துவங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், திருநெல்வேலி – நாகர்கோவில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணி நடப்பதையொட்டி குறிப்பிட்ட சில நாட்கள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் இந்த தடத்தில் செல்ல வேண்டிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறி, தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாகர்கோவில் – திருநெல்வேலி (மாலை 6:40 மணி), திருநெல்வேலி – தூத்துக்குடி (காலை 7:35 மணி) , தூத்துக்குடி – திருநெல்வேலி (மாலை 6:00 மணி) ஆகிய விரைவு ரயில்கள், வரும் செப்.,25 ம் தேதியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் தூத்துக்குடி – நாகர்கோவில் (காலை 6:35 மணி )விரைவு ரயில், வரும் செப்., 26ம் தேதி ரத்து செய்யப்படுகிறது தொடர்ந்து தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா ரயில், வரும் செப்., 19ம் தேதி முதல் செப்., 27ம் தேதி வரை, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதையடுத்து, நாகர்கோவில் – தாம்பரம் அந்த்யோதயா ரயில், செப்., 20ம் தேதி முதல் 28 வரை, திருநெல்வேலியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வகையில் நாகர்கோவில் – சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில், வரும் செப்., 25 ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9:30 மணிக்கு புறப்படும் மற்றும் புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில், வரும் செப்., 25ம் தேதி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி – புதுச்சேரி விரைவு ரயில், வரும் செப்., 26ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 3:40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here