127 பேர் உயிரை காவு வாங்கிய கால்பந்து போட்டி, ரசிகர்களிடையே வெடித்த பூகம்பம்., கலவர பூமியான இந்தோனேஷியா!!

0
127 பேர் உயிரை காவு வாங்கிய கால்பந்து போட்டி, ரசிகர்களிடையே வெடித்த பூகம்பம்., கலவர பூமியான இந்தோனேஷியா!!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கால்பந்து போட்டி

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பரம எதிரிகளான பெர்சிபயா சுரபயா அணியும், அரேமா மலாங் அணியும் மோதியது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழா தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் பெர்சிபயா சுரபயா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அரேமா மலாங் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்த ஆட்டத்தில் அரேமா மலாங் அணி தோல்வி அடைந்ததை தாங்க முடியாத ரசிகர்கள், பெர்சிபயா அணி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் மைதானத்தில் மிகப்பெரிய பூகம்பமே வெடித்தது.

இந்த பிரச்சனைகளை தடுப்பதற்காக போலீசார் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியில் செல்ல முயன்றனர். இதில் பலரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

களத்தில் நிகழும் அனல் பறக்கும் ஆட்டம்.., இந்திய பேட்ஸ்மேன்கள் மாயாஜாலத்தை நிகழ்த்துவர்களா?? வெளியாகி தகவல்!!

மேலும் 100 க்கும் அதிகமானோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமையும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்த சம்பவத்தினால் அடுத்த ஒரு வாரத்திற்கான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here