திருப்பதி போறீங்களா? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! அமலான புதிய வழிமுறைகள்!!

0
திருப்பதி போறீங்களா? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! அமலான புதிய வழிமுறைகள்!!
திருப்பதி போறீங்களா? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! அமலான புதிய வழிமுறைகள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் அமலுக்கு வந்த VIP பிரேக் தரிசன முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

VIP பிரேக் தரிசனம்:

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அன்றாட மக்கள் கூட்டம் அலைமோதும், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் VIP பிரேக் தரிசன முறையில் திருப்பதி தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, சுவாமி நடை திறக்கப்படும் போது VIP பிரேக் தரிசனத்தில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரைஅவர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்நேரத்தில் இலவச தரிசன வரிசையில் சாமானிய மக்கள் முந்தைய நாள் இரவு 1 மணிக்கு நடை அடைத்ததிலிருந்து காலை 8 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை தொடர்ந்தது. இதனால் இதில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. தற்போது VIP தரிசனத்தை காலை 8 மணி முதல் அனுமதிக்க தேவஸ்தான முடிவு செய்ததன் மூலம் சாமானிய மக்கள் அதிகாலை முதல் காலை 8 மணி வரை சுவாமியை தரிசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

5 ஆம் வகுப்பு மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூர ஆசிரியர்.., ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

VIP க்கள் நவம்பர் மாதம் வரை அதிகாலை முதல் தரிசனம் செய்வதால் இரவு திருப்பதி மலையில் தங்கியிருக்க ஸ்டார் ஹோட்டல் போன்ற தங்கும் விடுதியை தயார் செய்ய வற்புறுத்துகிறார்கள், இல்லையெனில் வேறு விடுதியை தயார் செய்ய தொந்தரவு செய்வது அடிக்கடி நிகழ்கிறது. இதனால் தங்கும் அறைகள் தட்டுப்பாடு அதிகமாகிறது. இந்த தரிசன முறை மாற்றம் காரணமாக, VIP க்கள் திருப்பதியில் உள்ள ஹோட்டலில் இருந்து வருவார்கள் என்பதாலும் சாமானிய மக்களின் காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டு, அவர்களும் எளிதில் சுவாமியை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here