ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் – செப்டம்பர் முதல் இலவச பொருட்கள் ரத்து – மாநில அரசு அதிரடி முடிவு!!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் - செப்டம்பர் முதல் இலவச பொருட்கள் ரத்து - மாநில அரசு அதிரடி முடிவு!!

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு பொருட்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் இலவசமாக பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இலவச பொருட்கள் கிடையாது:

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையிலும் மற்றும் இலவசமாகவும் கிடைக்க உதவுவதற்காக அரசு சார்பாக ரேஷன் கடை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாகக் கிடைக்கிறது. மேலும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுவதால் மக்களுக்கு அதிக அளவில் பயன்படுகிறது.

இதனை தொடர்ந்து பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வந்ததால் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் இலவசமாக பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, கடந்த 2020ம் ஆண்டு அரசாங்கம் அறிமுகப்படுத்திய பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மூலம் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து காணப்பட்டதால் இந்த திட்டம் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை முதல் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கீழ் தரப்படும் கோதுமை மற்றும் அரிசி ஆகிய இலவச பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு கிலோ கோதுமைக்கு 2 ரூபாயும், ஒரு கிலோ அரிசிக்கு 3 ரூபாயும் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here