மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.,, தமிழகத்தில் ‘இந்த’ 2 நாட்கள் பார்கள் இயங்காது!!

0
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.,, தமிழகத்தில் 'இந்த' 2 நாட்கள் பார்கள் இயங்காது!!

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்றுள்ள சிறப்பு பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

பார்கள் மூடல்;

வெள்ளையர்கள் கீழ் அடிமை தேசமாக இருந்த இந்தியாவை, மீட்டெடுக்க போராடிய ஏராளமான தலைவர்களில் முதன்மையானவர் காந்தி. அவரின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை நாம் காந்தி ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம். எனவே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் அக்டோபர் 2ஆம் தேதி கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனை , மீறினால் மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், மிலாடி நபி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.,, இனி நகை வாங்குறது கஷ்டம் தான்! தீபாவளி அதுவுமா இப்படி ஆயிருச்சே!!

நடப்பு வருடம் வரும் அக்டோபர் 9ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாள், மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here