என்னம்மா ஜொலிக்கிறாங்க பாரேன் – ஷிவானியின் ஒரே போஸால் ஸ்தம்பித்த இளசுகள்!

0

சின்னத்திரையில், தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் எக்கச்சக்க திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருக்கும் சிவானி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஷிவானி போட்டோ:

சின்னத்திரையில் அறிமுகமாகி கூடிய விரைவில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகை பட்டியலில் ஷிவானியும் தற்போது இடம் பிடித்துள்ளார். அதாவது, ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இதற்குப் பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலில் இணைந்து நடித்தார்.

இதற்குப் பிறகு அவருக்கு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் வர சீரியலில் இருந்து விலகினார். இதன் பின்னர் ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பும் கிடைக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை சம்பாதித்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது சிவானி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிவிட்டன.

திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். தற்போது, காபி ஷாப்பில் எளிமையாக அமர்ந்து இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவானி புகைப்படத்தை பதிவிட்டு இருப்பதால் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here