பட வாய்ப்பு கிடைத்த கொண்டாட்டத்தில் திரியும் ஷிவானி… ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!!!

0

பார்க்க பார்க்க சலிக்காத புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் ஷிவானி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மழை படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து புகழ் பெற்றதை விட போட்டோ ஷூட்கள் மூலம் ஷிவானிக்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பு அதிகம். சிறு வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்து இருந்தாலும், இவரின் தோற்றம் மற்றும் நடிப்பு முன்னணி நடிகைகளுக்கு இணையாக இருந்தது. இதை வைத்து  கொண்டு ஒரு சில சீரியல்களில் நடிக்க கமிட்டாகி நடித்து வந்தார்.

இருப்பினும் அதில் அந்த அளவுக்கு புகழ் கிடைக்காததால் வேறு யுத்தியை கையாண்டார். அதாவது இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களிலும் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டார். மேலும் அவரின் சமூக வலைத்தள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாலை 4 மணிக்கு வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்ததால், இவரை 4 மணி ஷிவானி என்று இவரின் ரசிகர்கள் இவரை செல்லமாக அழைத்து வந்தனர் அந்த அளவுக்கு இவர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டான ஒருவர்.

இந்நிலையில் எதற்காக இவ்வளவும் செய்தாரோ அது தற்போது நிறைவேறி உள்ளது. அதாவது இவர்  தற்போது கமலின் விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். உலகநாயகன் படத்தில் வாய்ப்பு அதுவும் விஜய் சேதுபதி ஜோடி என மிக பெரிய உச்சத்திற்கு சென்று உள்ள இவரை தற்போது கையில் பிடிக்க முடியவில்லை. அம்மணி அந்த அளவுக்கு சந்தோஷத்தில் இருக்கிறார்.

இருப்பினும் பழசை மறக்காமல் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம், வீடியோ என பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜெயம் ரவியின் மழை படத்தில் இடம் பெற்ற விண்ணோடு மேள சத்தம் என்ன…என்ற பாடலுக்கு தன் வீட்டின் அருகில் தேங்கியிருக்கும் தண்ணீரில் விளையாடியபடி உள்ளார். இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here