நடுக்கடலில் குத்தாட்டம் போட்ட ஷிவானி – சொக்கி போன ரசிகர்கள்!!

0

மாலத்தீவுகளில் தனது அம்மாவுடன் விடுமுறையினை கொண்டாடி வரும் நடிகை ஷிவானி நாராயணன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். நடுக்கடலில் குத்தாட்டம் போடும் ஷிவானிக்கு ரசிகர்கள் லைக்குகளை வழங்கி வருகின்றனர்.

நடிகை ஷிவானி நாராயணன்

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பல நடிகைகள் இன்று பலர் உள்ளனர். அந்த வகையில் தனது சிறு வயதிலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் “பகல்நிலவு” என்ற சீரியலில் நடிகையாக நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் இவருக்கும் அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த ஆசாத்திற்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இருவருமே பிரபலமாகினர். இந்த சீரியலுக்கு பின்பாக ஷிவானி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். அதன் பின்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் “ரெட்டை ரோஜா” என்ற சீரியலில் நடித்தார். அதில் இவருக்கு இரட்டை வேடம்.

தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை தக்க வைத்துக்கொண்டார். மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் ஆசாத்துடன் “கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் நடித்தார். இதில் சில காரணங்களால் இவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இதற்கு பின்பாக தான் ஷிவானி பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதே நாளில் சேவாக் செய்த சாதனை – மெமரிஸ் பிரிங் பேக்!!

ஆரம்பம் முதல் பிக் பாஸ் வீட்டில் பேசாமல் இருந்து வந்த ஷிவானி கடைசி நாட்களில் போட்டிகளில் நன்றாக விளையாடினார். தற்போது தனது அம்மாவுடன் மாலத்தீவுகளில் விடுமுறையினை கொண்டாடி வரும் ஷிவானி நடுக்கடலில் தான் டான்ஸ் ஆடும் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here