தன் அம்மாவுடன் குக் வித் கோமாளி பிரபலம் செய்த செயலை பாருங்களேன்… வைரலாகும் வீடியோ!!!

0

தன்னுடைய குறும்புத்தனத்தால் எக்கச்சக்க ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் ஷிவாங்கி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன் அம்மாவுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ஷிவாங்கி. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பாடல் திறமையை நிரூபித்து முதல் பத்து இடங்களுக்குள் வந்தார். மேலும் பாடும் போது வெளிப்படும்  இனிமையான குரலுக்கு சொந்தக்காரியான இவர், பேசும் போது அவருக்கு வெளிப்படும் குரலால் பல்வேறு வேதனைகளை அனுபவித்து  உள்ளார்.

இதை அவரே பல்வேறு நிகழ்ச்சிகளின் போது தெரிவித்து உள்ளார். மேலும் இவர் சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சிக்கு பின்னர் நுழைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் மற்றும் புகழ் உடனான அண்ணன் தங்கை பாசம், அஸ்வின் உடனான காதல் போன்ற ஒரு வித அன்பு என அனைத்தும் ரசிக்க வைத்த ஒன்று. மேலும் அவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் கிடைத்தது மட்டுமல்லாமல், படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஒரு சில படங்கள் மற்றும் ஆல்பங்களில் பாடல்களையும் பாடி உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் உடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here