ஹீரோயின் போல செம ஆட்டம் போட்ட ஷிவாங்கி…!அஸ்வின் பாத்தா அவ்ளோதான்!!!

0
முன்னணி பாடகருடன் இணைந்து பாட தயரான சிவாங்கி - அப்போ குக் வித் கோமாளி 3க்கு டாட்டவா??
முன்னணி பாடகருடன் இணைந்து பாட தயரான சிவாங்கி - அப்போ குக் வித் கோமாளி 3க்கு டாட்டவா??

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் காமெடிகள்  மூலம் மக்களை திரும்பி பார்க்க வைத்தவர் ஷிவாங்கி. தற்போது அவர் ஒரு வீடியோவை  வெளியிட்டு உள்ளார். அதில் மழை பாடலுக்கு அழகான மயில் போல நடமாடி உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள், நடிகைகள் போல ஆடுறாங்க என தெரிவித்து வருகின்றனர்.

இசை பின்னணியை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஷிவாங்கி கிருஷ்ணமூர்த்தி. இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகம் ஆனவர். அவருடைய அம்மா ஸ்ரீமதி பின்னி அவர்கள் ஒரு திரைப்பட பின்னணி பாடகி ஆவார். எனவே அவரின் மகளும் தன்னுடைய பயணத்தை இசையை வைத்தே தொடங்கினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் குக் வித் கோமாளி மூலம் மீண்டும் திரைக்கு வந்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் புகழிடம் காட்டும் அண்ணன் பாசம் மற்றும் அஸ்வின் உடன் செய்யும் சேட்டைகள் என அனைத்தும் ரசிக்கும் வகையில் அமைந்து இருக்கும். இந்நிலையில் இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குரு படத்தில் இடம்பெற்ற ‘நாரே நாரே…’ என தொடங்கும் மழையை மையமாக கொண்ட பாடலுக்கு அழகாக நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவர் ஒரு திரைப்பட நாயகி போல நடனமாடி உள்ளதாக கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விடியோவிற்கு பல லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here