ஸ்ரேயா கோஷல் பாடலை பாடிய குக் வித் கோமாளி பிரபலம்…. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ !!!

0

ஷிவாங்கி தனது சொக்கவைக்கும் குரலாலும் சில சில குறும்பு தனத்தாலும் பிரபலம் ஆனவர். இவர் சூப்பர் சிங்கர் என்ற இசை நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர். மேலும் அந்த நிகழ்ச்சியின் மூலமே  இவரின் இரு வேறு குரல்களும் அறியப்பட்டது. பாடும் ஷிவாங்கி குரல் ஒரு வலி நிவாரணி,பேசும் போது வெளிப்படும் இவர் குரல் குழந்தையின் வெளிப்பாடு.தற்போது அவர் “பாட்டில் இ பாட்டில்” என்ற மலையாள பாடலை தனது குரலால் பாடி அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை  ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் மூலம் தனது முத்திரையை பதித்தவர்  நாம சுட்டி குட்டி பெண் ஷிவாங்கி. இவர் “அன்பாலே அழகாகும் வீடு” என்ற பசங்க படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும் பாடியுள்ளார். மேலும் ஒரு சில ஆல்பம் பாடல்களும் பாடியுள்ளார். மேலும் இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பல்வேறு பாடல்கள் இன்றும் அனைவரிலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டக்கூடியவை.

ஷிவாங்கி சூப்பர் சிங்கரை தொடர்ந்து குக் வித் கோமாளி மூலம் மக்களை மகிழ்விக்க மீண்டும் விஜய் டிவியில் நுழைந்தார். அங்கும் அவர் சும்மா  இல்லாமல் தனது குறும்புத்தனத்தால்,வெகுளி தனமான பேச்சாலும் மக்களை  ஈர்த்தவர். தற்போது ஷிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரயாணம் படத்தில் ஜெயச்சந்திரன் இசையில் ஸ்ரேயா கோஷல் அவர்கள் பாடிய “பாட்டில் இ  பாட்டில் ” என்று இனிமையான பாடலை தனது இனிமையான குரலால் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இனிமையுடன் இனிமை சேர்ந்தால் கேட்கவா வேணும் இந்த பாடல் இசை பிரியர்களுக்கு அவர் சமர்ப்பித்த விருந்தாகவே இது அமையும்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here