இவ்ளோ அழக இம்புட்டு நாள் எங்கம்மா வச்சிருந்தீங்க…! புதிய அவதாரத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கி!!!

0

சூப்பர் சிங்கர் பிரபலம் ஷிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவரின் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் கருப்பு நிற உடையுடன் ஒரு தேவதை போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.

ஷிவாங்கி

சூப்பர் சிங்கர் என்ற இசை நிகழ்ச்சி மூலம் தன் குரலையும் தன் முகத்தையும் உலகிற்கு காட்டியவர் ஷிவாங்கி. அவரின் குரல் மூலம் ரசிகர்களை சேர்த்த இவர் அந்த நிகழ்ச்சியை அடுத்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் அந்த ரசிகர்கள் கூட்டத்தை பெருக்கிக் கொண்டார்.

அதாவது அந்த நிகழ்ச்சியில் அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை.அஸ்வின் உடன் காதல், புகழ், பாலா, சரத், ரக்க்ஷன் ஆகியோருடன் அண்ணன் தங்கை பாசம் என அந்த செட்டையே கலக்கி கொண்டு இருந்தவர்.

அவரின் நடை,உடை ,குறும்பு பேச்சு,குரல், பாசம், போடும் கெட்அப் என அனைத்தும் ரசிக்கும் வகையில் அமைந்து இருந்தது. அந்த நிகழ்ச்சியில் அஸ்வினுக்காக இவர் போடும் சண்டை, புகழுடன் இவர் செய்யும் லூட்டி என இவர் செய்யும் நகைச்சுவை அனைவரின் வயிற்றையும் புண்ணாக்கியது என்றே சொல்லலாம்.

மேலும் அவ்வப்போது இவரின் குரல் வழியாக வரும் பாடல்களும் கேட்பதற்கு இனிமையே. இருப்பினும் அவருடன் பழகும் அனைவரும் அவரை ஒரு சிறு குழந்தையாகவே பாவிக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் அவர் எட்டா புகழையே அடைந்து விட்டார் என்றே சொல்லலாம்.

அதனாலேயே என்னவோ இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்து வைரல் ஆகின்றன. இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு உள்ள புகைப்படமும் அந்த வகையை சேர்ந்ததே என்றே சொல்லலாம். அந்த புகைப்படத்தில் அழகிய கருப்பு நிற பாவாடை மற்றும் சட்டை அணிந்து ஒரு அழகு தேவதையாக காட்சி தருகிறார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்டுகளை இன்ஸ்டா பக்கத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here