‘இனி இந்த மாதிரி விடியோவை வைரல் ஆக்காதிங்க’ – அஸ்வின் ஷிவாங்கி பதிவால் கடுப்பான ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இணைந்து முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர்.

அஸ்வின், ஷிவாங்கி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் ஷிவாங்கி அதிக பிரபலமானார். ஆரம்பத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தாலும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்த இடம் என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் சீசனில் தனது குரலாலும், அப்பாவியான நடத்தையால் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார்.

அதனை விட இரண்டாவது சீசன் செம ஹிட். பவித்ரா, தர்ஷா, அஸ்வின் என இளைஞர்களை களமிறக்கியதால் டாப் ஹிட். அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி தான் அதிக பிரபலமானது. மேலும் அஸ்வின் இத்தனை நாட்கள் பட்ட கஷ்டத்திற்கும் நல்ல பலன் கிடைத்தது. தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

அஸ்வினுக்கு மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு புகழ் கிடைத்ததற்கு காரணமே ஷிவாங்கி தான். அதனால் தான் இத்தனை நாட்கள் அஷாங்கி என்று பல எடிட் விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த விடீயோக்கள் எல்லாம் வைரலானது. இதுவரையிலும் இது அனைத்தையும் ரசித்து கொண்டிருந்த அஸ்வின் திடீரென ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இது மாதிரியான மார்ஃபின் வீடியோ எல்லாம் நம்ப வேண்டாம். தற்போது வரை தான் சிங்கள் தான். நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்பொழுது தான் நான் எனக்கு கேரியரில் ஓரளவிற்கு முன்னேறி வந்துள்ளேன். இனியும் எனது கேரியரில் மட்டும் தான் கவனம் செலுத்துவேன். உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பக்கம் பார்த்தால் ஷிவாங்கி தன்னையும் அவரையும் வைத்து வெளிவரும் புகைப்படங்கள் அனைத்தும் பொய் தான். இதுமாதிரியான வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் கோவத்தில் உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் நீங்க அப்படி நடந்து கொண்டதால் தான் இத்தனை நாட்கள் இப்படி வீடியோ, எடிட்டிங் எல்லாம் வைரலானது. மேலும் இவர்களுக்குள் எதோ ஒரு பிரச்சனை நடந்ததால் தான் இப்படி ஆகி இருக்குமோ என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here