தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய ஆசிய நட்சத்திரம் சிவ தாபா!!

0
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய ஆசிய நட்சத்திரம் சிவ தாபா!!
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய ஆசிய நட்சத்திரம் சிவ தாபா!!

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், ஆசிய பதக்கத்தை வென்ற சிவ தாபா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:

ஆடவருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது ஹரியானாவில் நடைபெற்று வருகிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 386 வீரர்கள், 13 எடை பிரிவுகளின் கீழ் பங்கேற்று உள்ளன. இதில், கடந்த வருடம் ஆசிய அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற சிவ தாபா 63.5 கிலோ எடை பிரிவில் பங்கு பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் இந்த தொடரின் காலிறுதி போட்டியில், பஞ்சாப்பின் அஷுதோஷ் குமாரை எதிர்கொண்டார். இந்த போட்டியில், தொடர் ஆதிக்கத்தை செலுத்திய சிவ தாபா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதே எடை பிரிவின் மற்றொரு காலிறுதி போட்டியில், மணீஷ் கவுசிக் எதிராக மணிப்பூரின் ரோஹித் போட்டியிட்டார்.

கிளாமராக நடிக்க நிறைய நடிகைகள் இருக்காங்க.., வில்லிக்கு நான் மட்டும் தான்.., பிரபல நடிகை ஓபன் டாக்!!

இந்த போட்டியில், மணீஷ் கவுசிக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து அரையிறுதி போட்டியில், சிவ தாபாவுக்கு எதிராக மணீஷ் கவுசிக் மோத உள்ளார். இந்த தொடரின் 60 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதி போட்டியில், வரிந்தர் சிங், ஹரியானாவின் கவுரவ் சோலங்கியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here