ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தேர்வு… பி.சி.சி.ஐ அறிவிப்பு !!!

0

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து  பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்த அணியை வழி நடத்தி செல்ல ஷிகர் தவான் செல்வார் என்றும் அவர்  தலைமையில் 20 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.ஐ அறிவித்து உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில்  3 ஒரு நாள் மற்றும் மூன்று டி 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது. இந்த  போட்டிகள்   ஜூலை மாதம் 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடக்க  உள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாத நிலையில் ஷிகர் தவான் அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஷிகர் தவான் நீண்ட அனுபவம் கொண்ட வீரர். கடந்த இரண்டு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தியவர். தற்போது நிறுத்தப்பட  ஐ.பி.எல்.-ல் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் தான் துணைக் கேப்டனாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த இந்திய அணியில் இவர்கள் இருவரையும் தவிர, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூரியகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா,  யுஸ்வேந்திர சாஹல், ஆர். சாஹர், கே கவுதம், குர்ணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சி. சகரியா மற்றும் விக்கெட் கீப்பர்களாக  இஷான் கிஷன் மற்றும் எஸ் சாம்சன் ஆகியோர் உள்ளனர். வலை பந்துவீச்சாளர்களாக இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர்,அமர்ஜித் சிங் ஆகியோர் உள்ளனர்.

தற்போது  விராட் கோலி தலைமையில் 24 பேர் கொண்ட இந்திய அணி  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.மேலும் இந்த  அணியில் பல முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் Enewz Tamil :

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here