பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்க, நடிகர் ஷாருக்கான் தமிழ் நடிகர் அஜித்தை சந்திக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறி இருக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, நீங்கள் சந்திக்க விரும்பும் தமிழ் நடிகர் யார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு ‘ரஜினி மற்றும் விஜயை சந்தித்துவிட்டேன். அஜித்தை சந்திக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். விரைவில் அவரையும் சந்திப்பேன்’ என்று உற்சாகமாக பதில் அளித்துள்ளார்.