பாலிவுட் சினிமாவின் நடிப்பு ராட்சசன் ஷாருக்கான் தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீயுடன் இணைந்து ‘ஜவான்’ என்ற பான் இந்தியா திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என கோலிவுட் பட்டாளமே நடித்துள்ளது. ஆக்ஷன் மற்றும் அதிரடி காட்சிகளுடன் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், ‘ஜவான்’ படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் ஷாருக்கான் இந்த படத்தில் தனது நடிப்பு அனுபவம் குறித்து ஸ்வாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, ‘ஜவான் திரைப்படத்திற்காக நான் முதல் முறையாக மொட்டை அடித்தேன். இனிமேல் ஒருபோதும் மொட்டை அடிக்கப்போவதில்லை. என்னை மொட்டையில் பார்க்க வேண்டும் என்றால் ஜவான் படத்தைப் பாருங்கள்’ என்று கலகலப்பாக பேசியுள்ளார்.