வாட்ஸ்ஆப்பில் பத்திரிக்கை செய்தி நகல்களை பகிர்வது சட்டவிரோதம் – ஐஎன்எஸ் கடும் எச்சரிக்கை..!

0

பத்திரிகை செய்தி நகல்களை டெலிகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்வது சட்டவிரோதம் என இந்திய செய்தித்தாள்கள் கழகம் (ஐஎன்எஸ்) எச்சரித்து உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய தேவை:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து விதமான சேவைகளும் முடங்கிப்போய் உள்ளது. இதனால் நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதும் பல்வேறு சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்க செய்தித்தாள் நிறுவனங்கள் கடுமையாக உழைத்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐஎன்எஸ் எச்சரிக்கை:

இந்நிலையில் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் செய்தித்தாள்கள் பிடிஎப் (PDF) வடிவில் நகல் எடுத்து பலர் குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பத்திரிகை துறையினரை வஞ்சிக்கும் செயல் எனவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பெரும் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்திய செய்தித்தாள்கள் கழகம் எச்சரித்து உள்ளது. செய்திகளையோ அல்லது செய்திகளின் ஒரு பகுதியையோ நகல் எடுப்பது சட்டவிரோதம் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி ஆப்கள், வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும். மேலும், பத்திரிகைகளின் பி.டி.எப். கோப்புகள் மற்றும் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்வதில் வரம்புகள் நிர்ணயிப்பது மற்றும் தனிநபர்களை கண்டறிய பயன்பாட்டாளர் அடையாள குறியீடுகளை சேர்ப்பது மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலாக பி.டி.எப். கோப்புகளை பதிவிறக்கம் செய்வதில் இருந்து பயன்பாட்டாளர்களை தடுப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐஎன்எஸ் தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here