குக் வித் கோமாளியின் வைல்ட் கார்டில் ஜெயிச்சது யாரு தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்ட் கார்டு சுற்று நடக்க உள்ளது. அதில் நான்காவது பைனலிஸ்ட்டை தேர்ந்தெடுக்கும் சுற்றில் ஷகிலா பைனலுக்கு சென்றுள்ளார்.

குக் வித் கோமாளி ஷகிலா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி பைனலுக்கு வந்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் குக் வித் கோமாளி பைனல் சுற்று நடைபெறவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவை பெற்ற இந்நிகழ்ச்சி முடியப்போகிறது என்பதே பலருக்கும் வருத்தம் அளிக்க கூடிய செய்தியாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் வெளியான குக் வித் கோமாளி செமி பைனல் சுற்றில் மக்கள் மனம் கவர்ந்த குக்குகளான கனி, அஷ்வின், பாஸ்கர் மாஸ்டர் ஆகியோர் பைனலுக்கு சென்றுள்ளார்கள்.

தனது தோழியின் முன்பு கதிரால் அசிங்கப்படும் முல்லை – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைகளம்!!

இதன் தொடர்ச்சியாக இதுவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மற்ற அனைத்து குக்குகளுக்கும் வைல்ட் கார்டு சுற்று நடைபெறவுள்ளது. அதற்காக குக் வித் கோமாளி சீசன் 2வின் குக்குகள் இந்த வார வைல்ட் கார்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கு பின்பாக குக் வித் கோமாளி போட்டியாளர்களை திரையில் ஒன்று சேர்ந்து பார்க்க முடியாது.

இது தான் குக் வித் கோமாளியின் எல்லா போட்டியாளர்களும் கலந்து கொண்ட கடைசி எபிசோட். இந்த போட்டியில் யார் அந்த நான்காவது பைனலிஸ்ட் என்ற ஆர்வம் குக் வித் கோமாளி ரசிகர்கள் அனைவரிடமும் இருந்து வந்தது. அதில் நான்காவது பைனலிஸ்ட்டாக ஷகிலா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here