கிரிக்கெட்டுக்கே அவமான சின்னம் ஷகிப்… தாறுமாறாக விளாசும் நெட்டிசன்கள்.. ஏன் தெரியுமா??

0

டாக்கா பிரீமியர் டி20 கிரிக்கெட் தொடரில் மொஹம்மதன் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் மைதானத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு உள்ளார். அதாவது ஸ்டம்பை எட்டி உதைப்பது ,அதை தூக்கி எறிவது,அம்பயருடன் வாக்குவாதம் செய்வது  என மிக மோசமான செயல்களில் ஈடுபட்டு உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவர் கிரிக்கெட்டுக்கே ஒரு அவமான சின்னம் என்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கருதப்படுபவர்  ஷகிப் அல் ஹசன். இந்நிலையில் வங்கதேசத்தின் டாகா டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது .இந்த போட்டியானது  அபஹானி மற்றும் மொஹம்மதன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. முதலில் ஸ்போர்ட்ஸ் கிளப்  அணி களமிறங்கியது. அதன் முடிவில் 145/6 ரன்கள் எடுத்தது. ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அபஹானி அணி விளையாட தொடங்கியது. அதற்கு பந்து வீசிய ஷகிப் அல் ஹசன், நடுவரிடம் எல்.பி.டபிள்யூ கேட்டு முறையிட்டார்.

ஆனால் நடுவாரோ அதை வழங்கவில்லை. ஆனால்  ஷகிப் நேரடியாக நடுவரிடம் சென்று மீண்டும் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்புகளையும் பிடுங்கி தரையில் வேகமாக எரிந்தார். அதன்பின் நடுவரிடம் ஆக்ரோஷமாகப் வாக்குவாதம் செய்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் பதிவாகி இணையத்தில் வைரலானது. இன்னும் ஒரு பந்தை வீசி இருந்தால் போட்டியின் முடிவு தெரிந்திருக்கும். ஆனால் அம்பயர்கள் அதைச் செய்யாததால் ஷகிப் கோபப்பட்டதாக சக வீரரான தமீம் இக்பால் கூறினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஒரு அனுபவம் உள்ள கிரிக்கெட்டர்  ஒரு தெருக் கிரிக்கெட் ரவுடி போல் செயல்பட்டதாகவும் அவரை கிரிக்கெட்டுக்கே அவமானச் சின்னம் என்று சாடி வருகின்றனர். நெட்டிசன்கள் சிலரோ  தெரு கிரிக்கெட் ஆடுபவர்கள் கூட நாகரிகமாக நடந்துகொள்வர். ஆனால் இவர் இப்படி இருப்பது வேதனை அளிக்கிறது  என்று சாடியுள்ளனர். இதையடுத்து ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது  “போட்டியின்போது நான் கோபப்பட்டது தவறுதான். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அனுபவம் வாய்ந்த வீரராக இருந்து கொண்டு இதுபோல் ஆக்ரோஷமாக செயல்பட்டு இருக்கக் கூடாது. இது அனைத்தும் திடீர் கோபத்தால் தற்செயலாக நடந்த விஷயம். அணி வீரர்கள், நிர்வாகம், நடுவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோல் இனி நடைபெறாது” என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவங்களுக்காக ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டு இருந்தாலும், இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்து உள்ளது.மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடும் ஷாகிப் அல் ஹசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் ஷாகிப் அல் ஹசனை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்  வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here