அப்ரிடியின் சிறந்த உலக கோப்பை லெவன் அணி – சச்சினுக்கே இடமில்லை..!

0

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி எல்லா கட்டத்திலும் சிறந்த உலக கோப்பை லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கர், இம்ரான் கான் ஆகியோருக்கு இடம் அளிக்கவில்லை.

சிறந்த லெவன் அணி:

1992ம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. அப்போது இம்ரான் கான் கேப்டன் ஆக இருந்தவர். இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டியில் விளையாடி உள்ளார். இருவரும் இல்லாமல் உலக கோப்பை லெவன் அணியை யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அப்ரிடி தனது சிறந்த உலக கோப்பை அணியில் இருவருக்கும் இடம் கொடுக்கவில்லை.

தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆக ஆடம் கில்கிறிஸ்ட் மட்டும் சயீத் அன்வர் ஆகியோரை தேர்ந்தெடுத்து உள்ளார். 2 முறை தனது அணிக்கு உலக கோப்பை பெற்று தந்துள்ள ரிக்கி பாண்டிங் 3வது இடத்திலும், விராட் கோஹ்லி மற்றும் இன்சமாம் உல் ஹக் ஆகியோரை அடுத்தடுத்த இடத்திற்கு தேர்ந்தெடுத்து உள்ளார்.

ஆல் ரவுண்டர் இடத்திற்கு சவுத் ஆபிரிக்காவின் காலிஸ் மற்றும் வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், சோயிப் அக்தர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளனர். ஷேன் வார்னே மற்றும் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக லெவன் அணியில் உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here