இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று நேற்று நடைபெற இருந்தது. ஆனால், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்த போது மழை வெளுத்து வாங்கியதால் ரிசர்வ் நாளுக்கு (செப்டம்பர் 11) மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று நடைபெற்ற போது, இந்திய அணியின் டெத் ஓவர் ஸ்பேசிலிஸ்ட்டான பும்ரா தனக்கு பிறந்த முதல் குழந்தையை பார்க்க தாயகம் திரும்பினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் பின், சூப்பர் 4 சுற்றுக்காக மீண்டும் இலங்கை வந்த பும்ராவுக்கு பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் அப்ரிடி மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது, “பும்ரா மற்றும் அவரது குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், கடவுள் உங்கள் மகனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்” என நல் வார்த்தைகளை கூறி பரிசு ஒன்றையும் ஷஹீன் அப்ரிடி வழங்கி உள்ளார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மக்களே உஷார்…,நாளைக்கு இந்த பகுதியில் பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
Spreading joy 🙌
Shaheen Afridi delivers smiles to new dad Jasprit Bumrah 👶🏼🎁#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/Nx04tdegjX
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023