குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் – என்சிஆர்பி அதிரவைக்கும் புள்ளிவிவரம்

0
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் - என்சிஆர்பி அதிரவைக்கும் புள்ளிவிவரம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி 2018ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது 2017ம் ஆண்டை விட 22 சதவீதம் அதிகம் ஆகும்.

என்சிஆர்பி புள்ளிவிபரங்கள்

2018-ம் ஆண்டு குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764 ஆகும். 2017-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 32 ஆக இருந்தது.

குழந்தை கற்பழிப்பு சம்பவங்களில் தமிழ்நாடு (1,457) மூன்றாவது இடத்திலும், மராட்டிய மாநிலம் (2,832) முதலிடத்திலும், உத்திரப் பிரதேசம் (2,023) இரண்டாம் இடத்திலும் உள்ளது.

குழந்தை கடத்தல் சம்பவங்கள் – 44.2 சதவீதம்
‘போக்சோ’ சட்டத்தில் பதிவான சம்பவங்கள் – 34.7 சதவீதம்
காணாமல் போன குழந்தைகள் – 67,134 பேர்
குழந்தைகளை வைத்து ஆபாசப்படம் எடுத்தது தொடர்பானது – 781
குழந்தை திருமணங்கள் புகார் – 501
ஆசிட் வீச்சு சம்பவங்கள் – 228

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

10,349 விவசாயிகள் தற்கொலை – என்சிஆர்பி 2018 ம் ஆண்டிற்கான அறிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here