என்னடா விஜய் டிவிக்கு வந்த நிலைமை.., இனி மூட்டையை கட்டிட வேண்டியது தான்.., கவலையில் ரசிகர்கள்!!

0

சின்னத்திரையில் இப்பொழுது வெள்ளித்திரை ரேஞ்சுக்கு பல கலவைகளுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சண்டை காட்சிகள் முதல் காதல் வரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி கொண்டு செல்கின்றனர். அதிலும் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், பல சேனல்கள் இந்த சீரியல்களை வைத்து தான் போட்டி போட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி என பல சேனல்கள் உருவாகிக்கொண்டே தான் செல்கிறது. இப்பொழுது புதுப்புது கதையம்சத்தை வைத்து கொண்டே சீரியல்கள் நகர்ந்து கொண்டே உள்ளது. அதுவும் குறிப்பிட்ட சில சீரியல்கள் தான் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் சில காலமாக இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

அதே நிலைமை தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல். ஆனால் இப்பொழுதோ பாக்கியலட்சுமி சீரியலும் கயல் சீரியலும் தான் டாப்பில் உள்ளது. இப்பொழுது வெளியான டிஆர்பி லிஸ்டின் படி முதல் இடத்தில் கயல் சீரியலும் இரண்டாவது இடத்தில் சுந்தரி சீரியலும், மூன்றாவது இடத்தில் வானத்தை போல சீரியலும் இடம் பெற்றுள்ளது.

அதன் பிறகு 4வது இடத்தையும் கண்ணான கண்ணே சீரியல் பிடித்துள்ளது. அதன் பிறகு 5 வது இடத்தில் தான் பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. விஜய் டிவிக்கு இப்படி ஒரு நிலைமை வந்து விட்டதே என்று ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். அந்த பாரதி கண்ணம்மா சீரியலை ஒழித்து காட்டினாலே விஜய் டிவி விளங்கிவிடும் என்று ரசிகர்கள் இன்னொரு பக்கம் கொந்தளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here