விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விகடன்,குமரன் காம்போ – அப்போ ஒரே மாஸ் தான் போங்க!!

0

சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ள இயக்குனர் குமரன் பல்வேறு திரைப்பிரபலங்களுடன் ஒரு புதிய சீரியல் மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் குமரன்

ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த ‘திருமதி செல்வம்’ சீரியலின் இயக்குனர் தான் குமரன். இந்த திருமதி செல்வம் தொடர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியலாக இருந்தது. அதே போல மக்களின் பேராதரவுடன் பல நூறு எபிசோடுகளை கடந்து இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த தொடரின் மூலம் பிரபலமான இயக்குனர் குமரன் தொடர்ந்து சன் டிவியில் தென்றல், தெய்வமகள், நாயகி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சன் டிவி சீரியல்களின் மூலம் திரைப்பயணத்தை ஆரம்பித்த இயக்குனர் குமரன் தற்போது விஜய் டிவியுடன் கை கோர்க்க உள்ளாராம். குமரன் புதிதாக இயக்கவுள்ள புதிய தொடரை விகடன் டெலிவிஷன் குழுமம் தயாரிக்கவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ள இந்த தொடருக்கு ‘தமிழும் சரசுவதியும்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னதாக குமரன் இயக்கியுள்ள அனைத்து சீரியல்களும் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல்களாகும்.

இனி ரீசார்ஜ் வாட்ஸ்அப் மூலமாகவே செய்துகொள்ளலாம் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

அதே போல குமரனின் சீரியல்கள் அனைத்திலும் பெண்ணை குறிக்கும் விதத்தில் தான் தலைப்புகளும் இருக்கும். தற்போது குமரன் இயக்கவுள்ள ‘தமிழும் சரசுவதியும்’ தொடரில், சன் டிவியில் ‘தென்றல்’ சீரியலில் நடித்துள்ள நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான தீபக் நடிக்கவுள்ளார் எனவும் ‘நாயகி’ சீரியலில் நடித்துள்ள நடிகையும் தொகுப்பாளினியுமான நட்சத்திரா நடிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் சீரியல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here