காதல் கணவரை விட்டு பிரிந்த ரோஜா சீரியல் பிரியங்கா நல்காரி?? அவரே சொன்ன பகிர் பதில் இதுதான்!!

0
காதல் கணவரை விட்டு பிரிந்த ரோஜா சீரியல் பிரியங்கா நல்காரி?? அவரே சொன்ன பகிர் பதில் இதுதான்!!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா நல்காரி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் என்ற சீரியலில் கமிட்டாகி நடித்து வந்தார். ஆனால் பல வருடங்களாக தான் காதலித்து வந்த ராகுல் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டு, அந்த சீரியலில் இருந்து விலகினார்.  மேலும் தனது கணவருடன் மலேசியாவில் செட்டிலானார்.
ஆனால்  மீண்டும் ஜீ தமிழின் நளதமயந்தி  என்ற புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இப்படி  இருக்கையில்  திடீரென தனது கணவருடன் தான்  எடுத்துக் கொண்ட புகைப்படத்தை  இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டாரா? என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் நீங்கள் தற்போது சிங்கிளா என கேட்டுள்ளார். அதற் பிரியங்கா ஆமாம் என பதிலளித்து நேற்று தனது ஸ்டோரியில் பதிவிட்டிருந்தாராம். இதன் மூலம் பிரியங்கா  தனது கணவரை பிரிந்துவிட்டார் என்ற செய்தி உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here