கர்ப்பமான விஷயத்தை உறுதி செய்த பிரபல சன் டிவி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலுமே கலக்கி வரும் நீலிமா ராணி தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீலிமா ராணி

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நீலிமா. தேவர் மகன் தான் இவருக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

neelima rani
neelima rani

அதன் பிறகு முன்னணி நடிகருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். வெள்ளித்திரையில் கலக்கியதோடு சின்னத்திரையிலும் கால் பதித்தார். மெட்டிஒலி சீரியலில் செல்வத்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் வாணி ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

neelima and her family
neelima and her family

வில்லி கதாபாத்திரம் இவருக்கு ஒத்துப்போக அரண்மனை கிளி சீரியலிலும் வில்லியாக நடித்து பிரபலமானார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அவர் குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இப்பொழுது அவர் கர்ப்பமாக இருக்கிறாராம்.

ஏற்கனவே நீலிமா, இசைவாணன் தம்பதிகளுக்கு 9 வயதில் குழந்தை இருக்கும் நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு இவர்களுக்கு மீண்டும் குழந்தை உருவாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here