குக் வித் கோமாளி சீசன் 4ன் சூப்பர் அப்டேட்.., களமிறங்க போகும் விஜய் டிவி நடிகர்!!

0
குக் வித் கோமாளி சீசன் 4ன் சூப்பர் அப்டேட்.., களமிறங்க போகும் விஜய் டிவி நடிகர்!!
குக் வித் கோமாளி சீசன் 4ன் சூப்பர் அப்டேட்.., களமிறங்க போகும் விஜய் டிவி நடிகர்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4 குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4:

விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் ஒன்னாக இருக்கும் பிக்பாஸ்க்கு பிறகு இருக்கும் ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த ஷோவில் இதுவரை மூன்று சீசன்கள் முடித்துள்ளது. அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த ஷோவோட அப்டேட் கடந்த மாதமே வெளியாகி இருக்கனும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் தற்போது ஜனவரி மாதம் வந்த நிலையில், இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவாக நடித்த சுவாமிநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் குறைந்த நேரத்தில் எல்லா உணவுகளை பற்றி எனக்கு கற்றுக்கொடுக்க செப் வேணும், அதுவும் சென்னைல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன தவிர செல்வராகவன் கூட யாராலையும் வாழ முடியாது., வில்லத்தனத்தை கொட்டிய அவரது மனைவி!!

பிக்பாஸ் முடியிற கட்டத்துக்கு நகர்ந்து வரும் நிலையில், இவர் எந்த மாதிரி ஒரு ஸ்டோரி போட்டதை பார்க்கும் பொழுது இவர் குக் வித் கோமாளி சீசன் 4 ல் கலந்து கொள்ள போறாரோ என்று ரசிகர்கள் இணையத்தில் பரவலாக பேசி வருகின்றனர். இவர் இந்த சீசனில் கலந்து கொண்டால் அடுத்த அஸ்வின் இவர் தான் போல என்று சின்னத்திரையில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here