அய்யயோ.. பிக் பாஸ் 6-இல் இந்த பிரபலமா.. அப்போ வீடே இரண்டாகிடுமே – பரபரப்பு தகவல்!

0
அய்யயோ.. பிக் பாஸ் 6-இல் இந்த பிரபலமா.. அப்போ வீடே இரண்டாகிடுமே - பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் சீசன் 5-ஐ தொடர்ந்து சீசன் 6 நிகழ்ச்சி வெகு சிறப்பாக விரைவில் துவங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6:

முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் சீரியல், ரியாலிட்டி ஷோ, சமையல் ஷோ போன்ற அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் மிகவும் மக்கள் விரும்பி பார்த்த ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் என்றால் மிகையாகாது. மேலும் மக்களின் வரவேற்பை பெற்ற இந்த ஷோ 5 சீசன்களை கடந்து தற்போது 6-வது சீசனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அதற்கான நடவடிக்கைகள் நிகழ்ச்சியாளர்களால் தொடர்ந்து நடைபெறுகிறது. முதல் நடவடிக்கையாக அதில் கலந்து கொள்ளும் பிரபலங்களை தேடும் வேட்டையில் ஈடுபடுகிறார்கள் நிகழ்ச்சியாளர்கள். இதில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக சில தகவல் வெளியாகின. தற்போது சர்ச்சை பிரபலம் ஒருவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

அதாவது, அண்மையில் சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சை செய்து பிரபலம் ஆனவர் தான் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. ஆனால் சமீபத்தில் அளித்த இன்டெர்வியூவில் ஸ்ரீநிதி பேசியபோது சிம்பு எனக்கு அண்ணன் மாதிரி என்று அந்தர் பல்டி அடித்தார். மேலும் தனது தோழியும் சீரியல் நடிகையுமான நட்சத்திராவின் கல்யாணத்தை பற்றி அவதூறாக பேசினார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இருந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மட்டும் கலந்து கொண்டால் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here