சீரியல் நடிகை ரச்சிதா உடனான விவாகரத்துக்கு காரணம் இதுதான் – மனம் திறந்த கணவர் தினேஷ்!!

0
சீரியல் நடிகை ரச்சிதா உடனான  விவாகரத்துக்கு காரணம் இதுதான் - மனம் திறந்த கணவர் தினேஷ்!!

சீரியல் நடிகை ரச்சிதா உடனான, விவாகரத்து முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும், என பலரும் பேசி வந்த நிலையில்  அதற்கான காரணத்தை அவரது கணவர் தினேஷ், மனம் திறந்து பேசியுள்ளார்.

மனம் திறந்த கணவர்:

சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரச்சிதா . இவர் நாச்சியார்புரம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அண்மையில் இவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் இவர், விரைவில் பிரபல இயக்குனர் ஒருவரை 2 வதாக திருமணம் செய்ய உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இது ஒரு புறம் இருக்க, மனைவி ரச்சிதா உடனான விவாகரத்து குறித்து நடிகர் தினேஷ் முதல் முறையாக மனம் திறந்து உள்ளார்.

அதாவது, எங்களுக்குள் ஏற்பட்ட இந்த பிரிவு தற்காலிகமானது தான் என்றும், விவாகரத்துக்கான எந்த முயற்சியும் இருவரும் இதுவரை எடுக்கவில்லை என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதுபோக, காலப்போக்கில் இந்த பிரச்சனை சரியாகி விடும் என நம்பிக்கை தெரிவித்து தனது விவாகரத்து குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here