“தயவு செய்து இத மட்டும் பண்ணுங்க” – கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!!

0
"தயவு செய்து இத மட்டும் பண்ணுங்க" - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!!

பிரபல நடன கலைஞர் ராகவ் என்பவரை, திருமணம் செய்துள்ள சீரியல் நடிகை ப்ரீத்தா தனது அம்மா கீழே விழுந்து மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

கண்ணீர் பதிவு:

சின்னத்திரை உலகில் பிரபல காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ராகவ் மற்றும் பிரீத்தா. ராகவ் நடிகராக நடித்தது மட்டுமல்லாமல், தொகுப்பாளராகவும், இயக்குனராகவும், கம்போசராகவும் கோலிவுட் உலகில் ஜொலித்து வருகிறார். இவர் ஜோடி நம்பர்-1, டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இடையில் சீரியல் நடிகை ப்ரீத்தா உடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. இந்த நிலையில் நடிகை பிரீத்தா, தனது தாய் குறித்து கண்ணீர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தன் அம்மா கீழே விழுந்து விட்டதாகவும், அதன் பிறகு அவருக்கு கை கால்கள் வரவில்லை என்றும், அவரால் பேச முடியவில்லை என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here