எல்லாம் முடிஞ்சு.,பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு குட் பை சொல்ல தயாராகிறாரா குமரன்? ரசிகர்கள் ஷாக்!!

0
எல்லாம் முடிஞ்சு.,பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு குட் பை சொல்ல தயாராகிறாரா குமரன்? ரசிகர்கள் ஷாக்!!
எல்லாம் முடிஞ்சு.,பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு குட் பை சொல்ல தயாராகிறாரா குமரன்? ரசிகர்கள் ஷாக்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தற்போது நடித்து வரும் ‘மாயத் தோட்டா’ என்கிற வெப் சீரிஸை குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் குமரன். பின்னணி நடன கலைஞராக இருந்து தனது கேரியரை ஸ்டார்ட் செய்து இப்பொழுது பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகியுள்ளார். இந்த தொடர் அவருக்கு அந்த அளவில் பெரிய ரீச் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து SJ சூர்யா நடித்த வதந்தி வெப் சீரிஸில் நடித்து அசத்தினார். தற்போது மீண்டும் ‘மாயத் தோட்டா’ என்ற வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த ‘மாயத் தோட்டா’ வெப் சீரிஸ் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் பேசியதாவது, SJ சூர்யா சாருடன் நான் சேர்ந்து நடித்த வதந்தி வெப் சீரிஸ் ஓரளவுக்கு எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நான் ரொம்ப ஆண்டுகளாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போ சினிமா டோட்டலாக Change ஆயிருக்கு. எனவே ‘வெப் சீரிஸ்’ கூட நடிக்கலாம்னு தோணுச்சு. மேலும் வதந்தியை பார்த்து தான் என்னை இந்த வெப் சீரிஸில் நடிக்க அழைத்தார்கள். இந்த சீரிஸில் நான் அரசியல்வாதியை காப்பாற்றும் சீஃப் செக்யூரிட்டி அதிகாரியாக நடித்துள்ளேன்.

இதுல தலையிடவே மாட்டேன்.., எல்லாம் அவங்க பாடு.., முக்கிய விஷயத்தை வெளியிட்டபிரபு தேவா!!

அதுமட்டுமின்றி இசட் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இந்த சீரிஸ்ல நடிக்க ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் யூனிட்டுமே எனக்கு ரொம்பவே உதவியா இருந்தாங்க. அதாவது ஒருபக்கம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல கைலி பணியனுடன் வந்து போயிட்டே இன்னொரு பக்கம் இந்த கெட்-அப்புக்கு மாற வேண்டி இருந்தது. இந்த சீரிஸ் நிச்சயம் எனக்கு ஒரு நல்ல வரவேற்பை தரும்னு நம்பறேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here