கந்த சஷ்டி கவச விவகாரம் – கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் பாய்ந்தது குண்டர் சட்டம்!!

0

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செந்தில் வாசன் மீது குண்டர் சட்டம்..!

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன், ராமாபுரத்தைச் சேர்ந்த சுரேந்திரன் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மவுண்ட் கோபால் என்பவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், மவுன்ட் கோபால் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார்.

காரைக்காலில் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது நேற்று குண்டர் சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அதே கூட்டத்தை சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் மீதும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் செந்தில்வாசன் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here