கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்காக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள் இவர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதாவது செந்தில் பாலாஜிக்கு சரியான சாப்பாடு இல்லாமல், மன அழுத்தம் காரணமாக அவரது உடல் எடை சுமார் 8 கிலோ குறைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் இருப்பதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகி கொண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.