முதியோர் உதவித்தொகை பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ்.,, முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!!

0
முதியோர் உதவித்தொகை பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ்.,, முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!!

முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படுவதாக பரப்பப்படும் தகவல் முதியோர் மற்றும் ஆதரவற்ற மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

முதியோர் உதவித்தொகை:

தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை மறுவாழ்வு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உதவித் தொகையாக, மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் கடந்த மாதம் முதியவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், உதவி தொகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் இணையத்தில் வைரலானது. இந்த சூழலில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கூறியது, கடந்த ஆட்சி காலத்தில் சம்பந்தம் இல்லாத காரணங்களை கூறி முதியோர் உதவித்தொகை பயனர்களில் 400 க்கு மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.,,புதிய வசதி அறிமுகம்!!

ஆனால் தற்போதைய ஆட்சியில், திட்டத்திலிருந்து தகுதியற்றவர்கள் என நீக்கப்பட்டவர்களில் விவரம் சேகரிக்கப்பட்டு, இந்த திட்டத்தில் 2000 பேரை மீண்டும் சேர்த்து உள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த திட்டத்தில் கீழ் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டதாகவும், விரைவில் மறு ஆய்வு செய்து தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் மீண்டும் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here