பாக்கியலட்சுமி செழியனுக்கும், ஷபானாவுக்கும் நடந்த நிச்சயம் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரி தற்போது தனது காதலியான ஷபானாவுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை ஷபானாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆர்யன், ஷபானா

செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரின் இந்த முதல் சீரியலிலேயே இந்த அளவிற்கு பிரபலம் கிடைத்துள்ளது என்றால் அது பெருமைக்குரிய விஷயம் தான். ஜீ தமிழில் சிறந்த நாயகி என்ற விருதையும் பெற்றிருந்தார் ஷபானா.

செம்பருத்தி சீரியலும் ஹிட் அடிக்க அவருக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே சென்றது. பெரிய ஐயா என்று இவர் அழைக்கும் ஸ்லாங் தான் பிரபலமே. சில மாதங்களுக்கு முன்பாக இவருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் செழியனுக்கும் காதல் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இரு தரப்பில் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.

அதன் பிறகு அவர்களே தங்களது காதல் விஷயத்தை வெளிப்படுத்தினர். மேலும் இருவரும் சேர்ந்த எடுத்த புகைப்படம் கடந்த வாரம் தான் வெளியானது. இந்நிலையில் தற்போது ஷபானா, ஆர்யன் நெருக்கமாக இருப்பது போன்றும் மோதிரம் மாற்றிக்கொண்டது போன்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு நிச்சயம் நடந்து விட்டதா?? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here