செம்பருத்தி சீரியலுக்கு வரும் மற்றொரு வில்லி – புதிதாக இணையவுள்ள நடிகை யார் தெரியுமா?

0

ஜீ தொலைக்காட்சியில் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி தொடரில் தற்போது புதிதாக நடிகை நந்தினி இணைந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செம்பருத்தி சீரியல்:

ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகியான ஷபனாவிற்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆகையால் இந்த தொடரை விட்டு ஷபானா விலக போவதாகவும், இந்த சீரியல் முடிவடைய போவதாகவும் வதந்திகள் பரவின.

தற்போது இந்த தொடரில் நடிகை நந்தினியும் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த தொடரின் கதாநாயகனும் நந்தினியும் படப்பிடிப்பில் இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் நந்தினி எந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்தான எந்த தகவலும் வெளியாகவில்லை. அவரது தோற்றத்தை பார்க்கையில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here