முதன்முறையாக ஷபானாவுடன் புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட பாக்கியலட்சுமி செழியன் – காதல் ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

0

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நாயகியாக நடிக்கும் ஷபானா முதன்முதலாக தன் காதலனான பாக்கியலட்சுமி செழியனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷபானா

செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் தான் ஷபானா. இவரின் நடிப்பும், குழந்தை தனமான செய்கையும் அனைவரையும் கவர்ந்திழுத்தது. ஷபானாவிற்கு பெரிய ஆர்மியே உருவானது. நடிக்க வந்த அடுத்த வருடத்திலேயே சிறந்த நாயகி என்ற விருதையும் பெற்றார்.

Sembaruthi serial Shabana in love with Bhagyalakshmi serial Aryan? Here's the latest details

இவர் ஆதியை பெரிய அய்யா என்று கூப்பிடும் விதமே தனி தான். மேலும் இவர் தீவிர விஜய் ரசிகை வேறு. விஜய் பேச்சை எடுத்தாலே குதூகலமாகி விடுவாராம். மேலும் அவரை போலவே சில மேடைகளில் பேசியும் காட்டியுள்ளார். இந்நிலையில் அவர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது.

அதாவது பாக்கியலட்சுமி செழியனை தான் ஷபானா காதலித்து வருகிறாராம். இருவரும் சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்தையும் பெற்று கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அதுவும் ஜீ தமிழின் பிரபல ஜோடியான மதன், ரேஷ்மா மற்றும் அவர்களின் குடும்பம் மற்றும் ஷபானா செழியனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here