‘பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ நேரமில்லை’ – செல்லூர் ராஜு பதிலடி!!

0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அதன் தொகுப்பாளரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று பதிவிட்டு இருந்தார். இன்று இது குறித்த கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடைபெற்று வரும் ரியாலிட்டி கேம் ஷோ. இந்த நிகழ்ச்சியை தமிழில் உலக நாயகனான கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் அரசியலிலும் குதித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் தனது கட்சியை தொடங்கி வரப்போகும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நிற்பதற்கான வேலைகளை செய்து வருகிறார்.

‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு இவர்கள் தான்’ – முதல்வர் பழனிசாமி கருத்து!!

அதற்கு முதற்கட்டமாக “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் அரசியலில் நுழைந்த உடன் அரசியல் களமே சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, “கமல் நாட்டை ஆள நினைத்தால் ஒரு குடும்பம் கூட உருப்படாது எனவும், தனது படங்கள், பாடல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  மூலம் அவர் நாடு மக்களுக்கு சொல்ல வரும் கருத்து என்ன?” எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு கமல்ஹாசன் “பிக் பாஸை முதல்வர் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

செல்லூர் ராஜு பதிலடி:

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு பிக் பாஸை பார்ப்பதற்கு முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நேரமில்லை, அதுமட்டுமல்லாமல் அமைச்சர் பதவியில் அமர்வது மலர் படுக்கையில் அமர்வது இல்லை, முள் படுக்கையில் அமர்வது போன்றது என்றும், அதிமுகவிற்கு கூட்டணி பற்றி கவலை இல்லை எங்களுக்கு எப்போதும் எஜமானிகள் மக்கள் தான்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here