NEET தெரியும் அது என்ன SEET?? முழுவிவரம் இதோ!!

0

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வுக்கு பதில் சீட் தேர்வு என்று அறிவித்தார்.

சீட்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கமல்ஹாசன் தனது தேர்தல் அறிக்கையை கோவையில் வெளியிட்டார். இதில் மக்களை கவரும் வண்ணத்தில் பல திட்டங்கள் இடப்பெற்றிருந்தது. அதில் அனைவரும் முக்கியமாக உற்று நோக்கியது என்னவென்றால் SEET தேர்வு. தற்போது தமிழகத்தில் மருத்துவ படிப்பிறகாக நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீட்டிற்கு பதில் சீட் என்று அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சீட் அப்படியென்றால் என்ன என்று அனைவரும் குழம்பி வருகின்றனர். தற்போது நடத்தப்படும் நீட் தேர்வு மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு மட்டுமே நீட் கட்டாயம் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் எந்த சட்டத்தில் அது மாநில அரசுக்கும் கட்டாயம் என்று சொல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வில் சிபிஎஸ்சி பாடம் மட்டும் தான் இடம்பெறவேண்டும் என்றும் எந்த சட்டமும் இல்லை. மத்திய அரசிற்கும் ஓர் சட்டம் உள்ளது. அதுபோல் மாநில அரசிற்கும் ஓர் சட்டம் உள்ளது. தற்போது இவர்கள் அறிவித்திருக்கும் SEET தேர்வு என்றால் State Entrance Eligibility Test .

செவிலியர் கல்லூரியில் திடீர் தீ விபத்து – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்த தேர்வில் ஸ்டேட் போர்டு பாடத்திட்டங்கள் மட்டுமே இடப்பெறும். இதனால் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொன்ராஜும் விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் கூறியது, இந்த விவரம் தமிழக அரசுக்கு தெரியாமல் உள்ளது என்று விமர்சித்துள்ளார். தற்போது இவர்கள் அறிவித்திருக்கும் இந்த SEET திட்டம் தமிழக மாணவர்களிடம் ஓர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது சாத்தியமா என்பது விரைவில் தான் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here