
நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த புகார் தொடர்பாக விஜயலட்சுமியை நேரில் அழைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
தற்போது விஜயலட்சுமி மீண்டும் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அதில் என்னை உங்க வீட்டு பெண்ணாக நினைத்து நியாயம் வாங்கி கொடுங்கள் என்று காவல் துறையிடம் கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று சீமானை நேரில் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
என்னது.., சமந்தா அரசியலில் குதிக்கப் போகிறாரா? என்னடா சொல்றீங்க? அப்ப சினிமா?
இந்நிலையில் இந்த சம்மன் மனு தொடர்பாக சீமான் கூறியதாவது, இன்று என்னால் ஆஜராக முடியாது. வருகிற செப் 12ம் தேதி ஆஜராகிறேன். மேலும் நாளை நாமக்கல்லில் எனக்கு இன்னொரு வழக்கு ஒன்று உள்ளது. எனவே அங்கே செல்ல வேண்டும். அதனால் 12ம் தேதி ஆஜராகிறேன் என்று பதில் அளிக்க இருப்பதாக கூறியுள்ளார்.