நடிகர் விஜய்க்காக குரல் கொடுத்த சீமான் – மிரட்டும் பாஜக!!!

0
நடிகர் விஜய்க்காக குரல் கொடுத்த சீமான் - மிரட்டும் பாஜக!!!
நடிகர் விஜய்க்காக குரல் கொடுத்த சீமான் - மிரட்டும் பாஜக!!!

நடிகர் விஜய் வைத்திருக்கும் சொகுசு காரண ரோல்ஸ் ராய்ஸ்க்கு வரி கேட்ட வழக்கை விசாரித்து ரூ.1 லட்சம் அபராதம் அளித்தது சென்னை உயர்நீதிமன்றம். அவருக்கு அபராதம் அழைத்த இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக பயங்கரளவில் சமூக வலைத்தளங்கள் தொலைக்காட்சி செய்திகள் என அனைத்திலும் பரவ வந்த நிலையில். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரூம் இயக்குனருமான சீமான் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பாஜகவை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்த சீமான்…

தளபதி நடிகர் விஜய்யின் சொகுசு கார் ஆன ரோல்ஸ் ராய்ஸ் கார் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அந்த காருக்கு வரி கட்ட சொல்லி அரசுகூறியது. அதற்கு நடிகர் விஜய் தடை கோரி அளித்தார். அந்த மனுவின் வழக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்து நடிகர் விஜயை ரூ,1லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்றும் அந்த அபராத தொகையை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக பயங்கரமாக தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கு விஜயின் ரசிகர்களும் பிரபலங்கள் பலரும் ஆதரவு கூறி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு எதற்கு ஒரு லட்சம் அபராதம்??

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட பங்கு பெற்றார், ஆனால் அவரால் வெற்றியடைய முடியவில்லை, இருந்தாலும் தமிழர்களுக்கு எப்பொழுதும் ஆதரவாக பேசி வரும் இவர். இப்பொழுது நடிகர் விஜயின் சொகுசு காருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு என்று உன்னுடைய படத்தில் வரும் பாடலின் வரி போல மன உறுதியோடு முன்னேறி வா தம்பி என்றும் அன்பு தம்பி விஜய் சரியாக வரி செலுத்தி வருபவர்.

நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்த சீமான்...
நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்த சீமான்…

அவரை அரசியல் காரணங்கள் மூலம் அச்சுறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினரின் தந்திர வேலை இது. கடந்த ஆண்டு கூட மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் பொது விஜய் வீட்டில நடந்த வருமான வர சோதனைக் கூட ஒரு பாஜகவில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கேற்றம் தான். அந்த சோதனையின் முடிவில் தம்பி விஜயிடம் இருந்து வரி ஏய்ப்பு செய்ததாக எந்தவித ஆவணங்களும் மற்றும் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. விஜயை பயம்புறுத்த வேண்டும் என்றும் அவரை அடிபணிந்து போக வேண்டும் என்றும் பாஜக செய்த செயல் இது. விஜய் நடிக்கும் படத்தில் பாஜகவின் ஆட்சி முறை அரசியல் பற்றி சித்தரிப்பதாவும் ஒரு சில காழ்ப்புணர்ச்சி கொண்டு வருமான வரி போன்றவற்றை நடத்தினர். அந்த சோதனையின் போது கூட எந்த ஒரு ஆவணம் சாட்சிகள் கூட கிடைக்கவில்லை. அவர் சரியாக வரி செலுத்தி வருகிறார் என்று கூறினார்கள் இதை நாடே அறியும். இப்படி இருக்கும் பொது அவர்மீது பொய் வழக்குகள் மற்றும் பொய் குற்றசாட்டுகள் என பாஜக மிரட்டி வருகிறது. தம்பி விஜயை குற்றவாளி போல சித்தரித்து அவர் மீது தேவையில்லாமல் அவதூறு பரப்பி வருவது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்திய நாட்டில் வரிவரியாக இருந்தால் தவறில்லை. அது மக்களிடம் இருந்து சுரண்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரசின் கருவியாக மாறிவிட்டது. வரி. ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி இருப்பதும், அது அனைத்து தரப்பு மக்களையும் கசக்கிப் பிழிவது தான் தவறு என்கிறோம். இது ஏதோ விஜய் என்ற ஒரு மனிதருக்கான பிரச்சனை அல்ல.

நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்த சீமான்...
நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்த சீமான்…

நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக வரிவிதிப்பு முறைகள் இருக்கிறது. 16 கோடி ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்பட்ட மருடந்துக்கு 6 கோடி ரூபாய் வரி வசூலித்த முதல் நாடு நம் நாடு. விஜய் வரிவிலக்கு சலுகை கேட்டதற்காக கொந்தளிக்கும் அரசு பலாயிரம் கோடி வரிப்பணத்தை கட்டாமல் அரசின் பணத்தை ஏமாற்றி வெளிநாடு சென்ற விஜய் மல்லையா லலித் மோடி போன்றவர்களிடம் மாட்டும் என் அரசு எந்த கேள்வியும் கேட்கவில்லை. அப்பொழுது அரசு என்ன செய்தார்கள்?அவர்கள் தப்பித்து ஓட உதவிய மோடி அரசு மீது செய்வது? ஆனால் இன்றுவரை பல லட்சம் கோடியாக மக்களின் வரிப்பணம் வாராக் கடனாக வழங்கப்பட்டு ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்டு அம்பானி, அதானி போன்ற தனி பெரும் முதலாளிகளுக்கும் பெரும் சலுகை வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசான பாஜக தம்பி விஜயை மிரட்டுகிறது. அவரை பழிவாங்கும் எண்ணத்தோடு இந்த செயல்களை செய்து வருகிறது.இந்த தந்திர வேலைகளை தடுத்து நிறுத்தவும் தம்பி விஜய்க்கு நான் தரவாக எப்பொழுது துணை நிற்பேன் என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here