13 ஆண்டுகளுக்கு பின் சீமானுக்கு கிடைக்கும் அங்கீகாரம் – தமிழக அரசு கொடுத்த கெளரவம்!

0
13 ஆண்டுகளுக்கு பின் சீமானுக்கு கிடைக்கும் அங்கீகாரம் - தமிழக அரசு கொடுத்த கெளரவம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வந்த சீமானுக்கு, தமிழக அரசு மிகப்பெரிய  அங்கீகாரத்தை அறிவித்துள்ளது.

மிகப்பெரிய கௌரவம்:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் சீமான். இவர் இயக்கத்தில் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து இயக்குனர் ராசு மதுரவன்  இயக்கத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான  மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தில் மணிவண்ணன் மகனாக நடித்திருந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான சிறந்த படங்கள், நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர், உள்ளிட்ட கலைஞர்களுக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் குறித்த அறிவிப்பு கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்டது. இதுவரை, நடத்த முடியாமல் போன இந்த விழா வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில், சீமான் நடித்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்துக்கு சிறந்த படத்திற்கான 2வது பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் கழித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இந்த அங்கீகாரம்  கிடைத்திருப்பது அவரது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here