தமிழக மாணவர்களே தயாராகுங்க., உயர்கல்விக்கான உதவித்தொகை விண்ணப்பம் வெளியீடு.., உடனே விண்ணப்பியுங்கள்!!

0
தமிழக மாணவர்களே தயாராகுங்க., உயர்கல்விக்கான உதவித்தொகை விண்ணப்பம் வெளியீடு.., உடனே விண்ணப்பியுங்கள்!!
தமிழக மாணவர்களே தயாராகுங்க., உயர்கல்விக்கான உதவித்தொகை விண்ணப்பம் வெளியீடு.., உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட “சீட்ஸ்” (SEEDS) தன்னார்வ நிறுவனம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த, ஆதரவில்லாத மற்றும் அனாதை மாணவ மாணவியர்கள், உயர்கல்வி மேற்கொள்வதற்கான உதவித்தொகையை வழங்கி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 500 க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு சில தகுதிகளையும் வகுத்துள்ளனர். அதன்படி 10ம் வகுப்பில் 350க்கும் மேல், 12ம் வகுப்பில் 480 க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இவர்கள் பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகையை வழங்குகின்றனர்.

தமிழகத்தில் இனி 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை தான்., ஜில் அறிவிப்பு வெளியீடு!!!

இதுபோக பொறியியல் படிப்புகளுக்கு 180க்கு மேல் கட் ஆப், மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் 500 க்கும் அதிகமான மதிப்பெண் என வரைமுறைகளை வகுத்துள்ளனர். குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடையவர்கள் உயர்கல்வியில் உதவித்தொகை விரும்பும் பட்சத்தில், https://www.seeds.org அல்லது https://www.seeeds.org/scholarship என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மே 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here