இந்த ஆண்டே தேசிய பாதுகாப்பு படையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

0

தேசிய பாதுகாப்பு படையில் இந்த ஆண்டு முதலே பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முக்கிய உத்தரவு:

தேசிய பாதுகாப்பு படையில் பணியில் சேர தகுதியான பெண்கள் தேர்வு எழுத அனுமதிக்க படுவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு அண்மையில் தொடரப்பட்டது.  இந்த வழக்கிற்கு பதிலளித்த மத்திய அரசு அதற்கான முன்னேற்பாட்டை துவக்கி விட்டதாகவும், விரைவில் பெண்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது.

ஆனால், இந்த புதிய முறையை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது எனவும், அடுத்த ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.  ஆனால், இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் மாதம் நடக்க உள்ளதால் இந்த ஆண்டே பெண்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here