நாடு முழுவதும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த அந்தந்த மாநில அரசு பல நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 35 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்க அசாம் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அம்மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற 5566 சிறுவர்களுக்கும், 60% மற்றும் அதற்கு மேல் மதிப்பெற்ற 30,209 சிறுமிகளுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்க திட்டமிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி டாக்டர் பனிகாந்த காகதி விருது திட்டத்தின் கீழ் வரும் 30ம் தேதி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 35,775 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தற்போது அசாம் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு போட்டி தேர்வு இல்லை? வெளியான அதிரடி தகவல்!!!!