ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வைரஸால் மனிதகுலம் பெரும் பாதிப்படையும் – பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை!!

0

ஆப்பிரிக்க வெப்ப மண்டல மலைக்காடுகளில் இருந்து அடுத்தடுத்து புதிய வைரஸ் பரவி வருகிறது. இது மனிதகுலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று விஞ்ஞானி ஜீன் – ஜக்கோஸ் கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வைரஸ் தொற்று:

தற்போது உள்ள காலங்களில் நாட்டில் வைரஸ் தொற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து கொரோனா என்னும் வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் சுமார் 1 ஆண்டுகாலமாக நாட்டில் உள்ள அனைவரையும் உலுக்கியது. நாம் இன்னும் அந்த வைரஸில் இருந்து முழுமையாக மீளவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corona virus
corona virus

ஆனால் தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வகை தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று தற்போது உள்ள கொரோனா வைரஸை விட 70 சதவீதம் வீரியம் மிகுந்துள்ளதாம். இதற்கிடையில் விஞ்ஞானி ஒருவர், ஆப்பிரிக்க மலைப்பகுதிகளில் இருந்து பரவும் புதிய வகை வைரஸ் மனித குலத்தை கடுமையாக பாதிக்கும் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

எபோலா வைரஸ்:

1976 ஆம் ஆண்டு எபோலா என்னும் ரத்த இழப்பு சோகை காய்ச்சல் நோய் பரவி வந்தது. இதன் அறிகுறிகள் சுமார் இரண்டு நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை காய்ச்சல், தசை வலி மற்றும் தலை வலி மிகுந்திருக்கும். மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்பாடு குறைந்து விடும். இந்த நோயை கண்டுபிடித்தவர் தான் ஆப்பிரிக்க விஞ்ஞானி ஜீன் – ஜக்கோஸ் முயம்பே.

“அண்ணாத்த” பட ஷூட்டிங்கில் 8 பேருக்கு கொரோனா – தனிமைபடுத்திக் கொண்ட ரஜினிகாந்த்!!

இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், எபோலா போன்ற அபாயகரமான வைரஸ்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் அபாயகரமான புதிய வைரஸ் நோய்கள் வன விலங்குகளிடம் இருந்து பரவி மனிதர்களை தாக்கும். அடுத்தடுத்து பரவும் புதிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் உயிரிழப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் கிருமிகள் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்படுத்தும் என்று அதிர்ச்சியளித்துள்ளார் . ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து வெளிவரும் புதிய மற்றும் ஆபத்தான வைரஸ்கள் மனித வாழ்விற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here