தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0
minister senkotiyan

கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து ஆய்வுகள் மேற்கொண்டபோது இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்.

பள்ளிகள் திறப்பு:

கடந்த மார்ச் மாதம் இறுதியில் பள்ளிகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. 144 தடை உத்தரவில் ஏற்பட்ட தளர்வுகள் காரணாமாக கல்லூரிகள் திறக்கப்பட்டன. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு சென்றனர்.

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் மற்றும் புரேவி புயல்கள் ஏற்பட்டன. இதனால் கடலோரத்தில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். புயல்கள் கரையை கடந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Minister-Sengottaiyan-Press-Meet_
Minister-Sengottaiyan-Press-Meet

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஈசூர், நீலமங்கலம், வெள்ளங்கொண்ட அகரம், வெண்ணாங்குபட்டு உள்பட பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் பற்றி கேட்டபோது இவ்வாறு கூறினார்,” தமிழகத்தில் புயல் மழை காரணமாக வெள்ள நிவாரண நடவடிக்கைகள் முன்னரே தொடங்கப்பட்டன இது குறித்து முதல்வர் பிரதமரிடம் விளக்கியுள்ளார்.

வருமான வரி கணக்கு வழக்கு – கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு!!

மேலும், குடிமராமத்து பணிகள் ஏற்கனவே மேற்கொள்ள பட்டதால் சேதங்கள் தடுக்கப்பட்டு பாதிப்புகள் குறைந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன, மத்திய குழுவும் ஆய்வுகள் செய்துள்ளன. இன்னும் 2நாட்ட்களில் முழுமையான வெள்ளசேத பாதிப்புக்கள் பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்றார் மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி கேட்ட போது பள்ளிகள் இம்மாதம் திறக்க வாய்ப்புக்கள் இல்லை முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here