தமிழகத்தில் அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்தி வைப்பு – முதல்வர் உத்தரவு!!

0
cmo of tamilnadu
cmo of tamilnadu

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பது தொடர்பான அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். இது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

முதல்வர் ஆலோசனை:

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியுடன் (நாளை) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் தடுப்பு நடவடிக்கைகள், என்னென்ன கூடுதல் தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர், இந்திய அளவில் அதிக சோதனைகள் நடத்திய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பேசுகையில், தமிழகத்தில் ஊரடங்கில் தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை 7,800 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக முதல்வர் கூறினார். அதுமட்டுமின்றி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். தேசிய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை – மக்களுக்கு மேலும் அவதியா??

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் உரையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here