தமிழக பள்ளி மாணவர்களே., ரூ.1.25 லட்சம் கல்வி உதவித்தொகை., Time இல்ல? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!!!

0
தமிழக பள்ளி மாணவர்களே., ரூ.1.25 லட்சம் கல்வி உதவித்தொகை., Time இல்ல? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!!!
தமிழக பள்ளி மாணவர்களே., ரூ.1.25 லட்சம் கல்வி உதவித்தொகை., Time இல்ல? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!!!

ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75,000மும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சமும் கல்வி உதவித்தொகை வழங்கக்கூடிய PM-YASASVI திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இத்திட்டத்தில் நாடு முழுவதும் 30,000 மாணவர்கள் என தமிழகத்தில் மட்டும் 3,093 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50லட்சத்துக்குள்ளும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்த மாணவர்கள் https://yet.nta.ac.in/frontend/web/schoollists/index என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பினை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., திட்டம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

இவர்கள் தேசியத் தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்கு https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவு தேர்வு செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here